செய்திகள்

சுயேச்சை எம்.பி.யாக அறிவிக்க கோரிய சசிகலா புஷ்பா வழக்கு முடித்து வைப்பு

Published On 2017-07-22 20:26 GMT   |   Update On 2017-07-22 20:26 GMT
தன்னை சுயேச்சை எம்.பி.யாக அறிவிக்க கோரிய சசிகலா புஷ்பா எம்.பி. வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் வழக்கை முடித்து வைப்பதாக அறிவித்தனர்.
புதுடெல்லி:

சசிகலாபுஷ்பா எம்.பி. அ.தி.மு.க. கட்சியில் இருந்து தான் நீக்கப்பட்டதால் தன்னை சுயேச்சையாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் கட்சி தாவல் தடை சட்டம் தனக்கு பொருந்தாது என்றும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், மோகன் எம்.சந்தானகவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சசிகலா புஷ்பா தரப்பில் வக்கீல் பி.ராமசாமி ஆஜரானார்.

அவரிடம் நீதிபதிகள், சசிகலா புஷ்பாவை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக கட்சித்தலைமையிடம் இருந்து ஏதேனும் கடிதம் வந்துள்ளதா என்றும் ராஜ்யசபா செயலாளரிடம் இருந்து ஏதேனும் கடிதம் வந்துள்ளதா என்று கேள்வி எழுப்பினர்.

இதுவரை அது போன்ற கடிதம் வரவில்லை என்று சசிகலா புஷ்பா தரப்பில் கூறப்பட்டது. இதற்கு நீதிபதிகள் இதில் மனுதாரர் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்றும் தற்போது உள்ள நிலையே தொடரலாம் என்றும் கூறி வழக்கை முடித்து வைப்பதாக அறிவித்தனர். 
Tags:    

Similar News