செய்திகள்

பஞ்சாப்: ரூ.25 கோடி மதிப்பிலான போதைப்பொருள் வைத்திருந்த இரு வெளிநாடுவாழ் இந்தியர்கள் கைது

Published On 2017-07-20 14:36 GMT   |   Update On 2017-07-20 14:36 GMT
பஞ்சாப் மாநிலத்தில் சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்தவர்களை சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

சண்டிகர்:

பஞ்சாப் மாநிலத்தில் சமீப காலமாக போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து வருகிறது. இப்பழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக சிறப்பு பிரிவு போலீசாரை அம்மாநில அரசு நியமித்துள்ளது.

சிறப்பு பிரிவு போலீசார், இன்று காலை மோதிநகர் பகுதியில் நடத்திய சோதனையின் போது ஐந்து கிலோ எடையுள்ள ஹெராயின் எனப்படும் போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்த பல்விந்தர் சிங் சித்து மற்றும் ரவீந்தர் சிங் ரவி ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு சுமார் 25 கோடி ரூபாய் இருக்கும் என போலீசார் கூறியுள்ளனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் ஜலந்தர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், அமெரிக்க வாழ் இந்தியர்கள் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் போதைப் பொருள் கடத்தியதற்காக ஏற்கனவே லூதியானாவில் கைது செய்யப்பட்டு நான்கு ஆண்டு அமெரிக்க சிறையில் தண்டனை பெற்றுள்ளனர் என போலீசார் கூறியுள்ளனர்.
Tags:    

Similar News