செய்திகள்

மணிப்பூரில் கனமழை: பாலம் உடைந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியது

Published On 2017-07-17 13:38 GMT   |   Update On 2017-07-17 13:38 GMT
மணிப்பூரில் கனமழையால் விரிசல் அடைந்திருந்த முக்கிய பாலம் உடைந்து விழுந்தது. இதனால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கி உள்ளது.
இம்பால்:

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. மழையால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தை மற்ற மாநிலங்களுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முக்கிய பாலமான ‘பாரக் பாலம்’ இன்று காலை திடீரென உடைந்து விழுந்தது. நேற்று இரவு முதலே அந்தப் பாலம் விரிசல் அடைந்து பலவீனமாக இருந்துள்ளது. இன்று காலை 10 சக்கரம் கொண்ட சரக்கு லாரி பாலத்தை கடந்து சென்றபோது உடைந்துள்ளது.

இதனால், ஜிரிபம் நகரில் இருந்து இம்பால் நோக்கி வந்த 200 சரக்கு லாரிகள் ஸ்தம்பித்து நிற்கின்றன. பாலத்தை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Tags:    

Similar News