செய்திகள்

சசிகலா புஷ்பா மனுவை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

Published On 2017-07-14 03:30 GMT   |   Update On 2017-07-14 03:30 GMT
சுயேச்சை எம்.பி.யாக அறிவிக்கக்கோரிய சசிகலா புஷ்பா மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.
புதுடெல்லி:

சசிகலா புஷ்பா எம்.பி. தரப்பில் அவருடைய வக்கீல் வீரேஷ் சாரியா, சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று ஆஜராகினார்.

அப்போது, சசிகலா புஷ்பா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதால் தன்னை சுயேச்சையாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும், கட்சி தாவல் தடை சட்டம் தனக்கு பொருந்தாது என்றும் 3-ந்தேதி மனு தாக்கல் செய்திருப்பதாகவும், அந்த மனுவை அவசர வழக்காக கருதி உடனே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் முறையிட்டார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுத்தனர். பதிவாளர் அலுவலகத்தில் மனு முறையாக பட்டியலிடப்படும் போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News