செய்திகள்

10-ஆம் வகுப்பு படிக்கும் போதே ஐஐடி-யில் படிக்கும் வாய்ப்பு பெற்ற சிறுவன்

Published On 2017-07-03 19:27 GMT   |   Update On 2017-07-03 19:27 GMT
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவனுக்கு, 10-ஆம் வகுப்பு படிக்கும் போதே ஐஐடி-யில் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
கான்பூர்:

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவனுக்கு, ஐஐடி கான்பூரில் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய அளவில் 2467 மதிப்பெண்கள் பெற்ற பெரோசாபாத்தை சேர்ந்த அபாய் அகர்வாலுக்கு, ஐஐடி-யில் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இளம் வயதில் ஐஐடி-யில் படிக்க இருக்கும் சிறுவன் அபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

10-ஆம் வகுப்பு படித்து வரும் அபாய்-க்கு ஜேஇஇ அட்வான்ஸ்டு பிரிவில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதுகுறித்து அபாய் கூறும் போது, ஐஐடி-யில் படிக்க வேண்டும் என்பதற்காக தான் உள்ளூரில் சிறப்புப் பயிற்சி பெற்று வந்ததாக கூறினார் மேலும் தனது முயற்சியை பலர் கிண்டல் செய்தார்கள். அதுவே எனக்கு உந்துகோலாக அமைந்தது என்றும் கூறினார்.



ஐஐடி கான்பூருக்கு பதிலாக ஐஐடி ரூர்கியில் இடம் கிடைக்க முயற்சி செய்து வருவதாக கூறிய அபாய், ஐஐடி-யில் இடம்பிடிக்க தான் கடுமையாக உழைத்ததாக கூறினார். மேலும் அதற்காக சமூக வலைதளங்களில் இருந்து தான் விலகியே இருந்தேன் என்றும் கூறியிருக்கிறார்.

இதற்கு முன்னதாக இந்திய அளவில் 64-வது இடம் பிடித்த, ஐதராபாத்தை சேர்ந்த சமோசா விற்கும் வி மோகன் அப்யாசின் மகனுக்கு ஐஐடி-யில் படிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News