செய்திகள்

மகாராஜாவை பிச்சைக்காரன் ஆக்குவதா?: ஏர் இந்தியாவை தனியார் மயமாக்குவதற்கு சிவசேனா எதிர்ப்பு

Published On 2017-06-30 10:05 GMT   |   Update On 2017-06-30 10:05 GMT
ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சிவசேனா, மகாராஜாவை பிச்சைக்காரன் ஆக்குவதா? என கட்சியின் நாளிதழான 'சாம்னா'வில் கேள்வி எழுப்பியுள்ளது.
மும்பை:

மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, ஏர் இந்தியா நிறுவனம் தனியார் மயமாக்கப்படும் என சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் அரசின் இந்த அறிவிப்புக்கு, தே.ஜ. கூட்டணியில் அங்கம் வகித்த சிவசேனா கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

சிவசேனாவின் கட்சி நாளிதழான ‘சாம்னா’வின் தலையங்கத்தில், மகாராஜாவை பிச்சைக்காரனாக்குவதா என சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.


‘முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த திட்டத்தை, இப்போதைய பா.ஜ.க. அரசு செயல்படுத்தி வருகிறது. தேசத்தை வழிநடத்தும் பா.ஜ.க.வால் ஏர் இந்தியா நிறுவனத்தை நடத்த முடியாதது ஏன்?

ஏர் இந்தியா நிறுவனத்தில் நடந்த ஊழல் விவகாரம் குறித்து பா.ஜ.க அரசு உரிய விசாரணை நடத்த முன்வராதது ஏன்?’ என்றும் சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.
Tags:    

Similar News