செய்திகள்

ரிசர்வ் வங்கி - மத்திய அரசு ஒப்புதல்: 200 ரூபாய் நோட்டு விரைவில் வருகிறது

Published On 2017-06-29 04:50 GMT   |   Update On 2017-06-29 04:50 GMT
ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதால், 200 ரூபாய் நோட்டுகள் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புழக்கத்தில் விடப்படும் என்று தெரிகிறது.
மும்பை:

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. அந்த நோட்டுகளை வங்கிகள் திரும்ப பெற்றுக் கொண்டன.

அவற்றுக்கு பதிலாக புதிதாக ரூ.500, ரூ.2000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சடித்து வெளியிட்டது. இதனால் பணத்தட்டுப்பாடு ஓரளவு சீரானது.

இதற்கிடையே சாதாரண மக்கள் பயன்பாட்டுக்கு ரூ.500-க்கு அடுத்து ரூ.2000 என்று இருப்பதால் பணம் மாற்றத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புதிதாக ரூ.200 நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. இதற்கு ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து மத்திய அரசும் ரூ.200 நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட ஒப்புதல் அளித்து விட்டது.

இதையடுத்து ரூ.200 நோட்டுகள் ரிசர்வ் வங்கியின் அச்சகத்தில் அச்சடிக்கும் பணி முழுவீச்சில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புழக்கத்தில் விடப்படும் என்று தெரிகிறது.

இதன்மூலம் ரூ.500 நோட்டுகளை மாற்றுவதில் உள்ள சிரமம் தவிர்க்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News