செய்திகள்

ஏரியில் இறங்கி நாயை குளிப்பாட்டிய சாப்ட்வேர் என்ஜினீயரின் கையை கடித்த முதலை

Published On 2017-06-26 06:12 GMT   |   Update On 2017-06-26 06:12 GMT
ஏரியில் இறங்கி நாயை குளிப்பாட்டிய சாப்ட்வேர் என்ஜினீயரின் இடது கையை கடித்து துண்டித்த முதலை, இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பெங்களூரு இந்திரா நகரை சேர்ந்தவர் முதீத் தத்தவாடே. இவரது மனைவி சுஷித்ரா சர்மா. இவர்கள் இருவரும் பெங்களூருவில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் இருவரும் ஆனேக்கல் வனப்பகுதியை சுற்றி பார்த்தனர். அங்குள்ள கனகபுராவை அடுத்த தத்தேகெரோ ஏரிக்கு சென்றனர். அங்கு தங்கள் வீட்டு செல்ல பிராணியான நாயை ஏரியில் குளிப்பாட்டி உள்ளார்.

அப்போது தண்ணீரில் இருந்த முதலை முதீத் தத்தவாடே மீது பாய்ந்து அவரது இடது கையை முழங்கைக்கு மேலே கடித்து துண்டித்தது.

அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது மனைவியும், அங்கிருந்த மற்றவர்களும் அவரை காப்பாற்றி அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து ஆரோஹள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஏரியின் கரை பகுதியில் இந்த ஏரியில் முதலைகள் உள்ளன. யாரும் இறங்கி குளிக்காதீர்கள் என்று வனத்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதையும் மீறி சாப்ட்வேர் என்ஜினீயர் தனது செல்லப் பிராணியை குளிப்பாட்ட நினைத்து ஏரியில் இறங்கி கையை இழந்துள்ளார்.

Tags:    

Similar News