செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமாருக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு

Published On 2017-06-24 04:40 GMT   |   Update On 2017-06-24 04:40 GMT
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மீரா குமாருக்கு பாதுகாப்பை அதிகரிக்க மத்திய உள்துறை முடிவு செய்தது. அதன்படி மீராகுமாருக்கு தற்போது “இசட் பிளஸ்” பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீராகுமார் நிறுத்தப்பட்டுள்ளார்.

அவருக்கு 17 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அவர் 28-ந்தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார்.

முன்னாள் சபாநாயகர் என்பதால் மீராகுமாருக்கு “எஸ்” பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. அதன்படி அவருடன் துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் ஒருவர் மட்டும் உடன் சென்று வந்தார்.

இந்த நிலையில் அவர் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதால், அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்க மத்திய உள்துறை முடிவு செய்தது. அதன்படி மீராகுமாருக்கு தற்போது “இசட் பிளஸ்” பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

"இசட் பிளஸ்" பாதுகாப்பு என்பது நாட்டின் உயரிய பாதுகாப்பு ஏற்பாடாகும். மிக, மிக முக்கிய தலைவர்கள், மற்றும் தீவிரவாதிகளால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பவர்கள் போன்றவர்களுக்கு மட்டுமே "இசட் பிளஸ்" பாதுகாப்பு அளிக்கப்படும்.


ஜனாதிபதி வேட்பாளரான மீராகுமாருக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை தவிர்க்க "இசட் பிளஸ்" பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் படி 36 கமாண்டோ வீரர்கள் மீராகுமாருக்கு பாதுகாப்பு அளிப்பார்கள்.

துப்பாக்கி ஏந்திய அந்த வீரர்கள் 2 வளையமாக நின்று மீராகுமாரை அழைத்து செல்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மீராகுமார் நாடு முழுவதும் ஆதரவு திரட்ட செல்லும் போது, 36 கமாண்டோ வீரர்களும் உடன் செல்வார்கள்.
Tags:    

Similar News