செய்திகள்

சிறுவர்கள், மூத்த குடிமக்களுக்கு பாஸ்போர்ட் கட்டணம் 10% குறைப்பு: சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு

Published On 2017-06-23 09:27 GMT   |   Update On 2017-06-23 09:27 GMT
8 வயதுக்குள் உள்ள சிறுவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு பாஸ்போர்ட் கட்டணம் 10 சதவீதம் குறைக்கப்படுகிறது என சுஷ்மா சுவராஜ் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி:

8 வயதுக்குள் உள்ள சிறுவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு பாஸ்போர்ட் கட்டணம் 10 சதவீதம் குறைக்கப்படுகிறது என சுஷ்மா சுவராஜ் அறிவித்துள்ளார்.

1967ம் ஆண்டு இந்திய பாஸ்போர்ட் சட்டம் வடிவமைக்கப்பட்டதன் 50 ஆம் ஆண்டு விழாவை ஒட்டி இன்று புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

8 வயதுக்குள் உள்ள சிறுவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு, பாஸ்போர்ட் கட்டணத்தில் 10 சதவீதம் குறைக்கப்படும். இனி வழங்கப்படும் பாஸ்போர்ட்கள் இந்தியில் மட்டுமில்லாமல் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News