செய்திகள்

வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களின் நிலை?: மோடிக்கு கேரள முதல்வர் கடிதம்

Published On 2017-06-05 16:09 GMT   |   Update On 2017-06-05 16:09 GMT
வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களின் நலன் கருதி அங்கு நிலவும் பிராந்திய ரீதியிலான பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி:

கத்தார் நாட்டுடனான தூதரக உறவை துண்டிப்பதாக சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் அறிவித்துள்ளன. தீவிரவாதத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி தூதரக உறவை துண்டிப்பதாக தெரிவித்துள்ளன. அத்துடன் கத்தார் நாட்டின் விமானங்கள், கப்பல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வளைகுடா நாடுகளின் வாழும் இந்தியர்களின் நலன் கருதி அங்கு நிலவும் பிராந்திய ரீதியிலான பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் அந்நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு எழும் பிரச்சனைகளை பார்க்க வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொள்ளும் அனைத்துவிதமான நடவடிக்கைக்கும் கேரள அரசு முழு ஆதரவு அளிக்கும்” என்று பினராயி விஜயன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சவுதி அரேபியாவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு சென்ற பின்னர் வளைகுடா நாடுகளில் இந்த பிரச்சனை எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News