என் மலர்
நீங்கள் தேடியது "வளைகுடா நாடுகள்"
- புதுடெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, நிலைமை கண்காணிக்கப்படுகிறது.
- தமிழர்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:
ஈரான் போரால் வளைகுடா நாடுகளில் சிக்கியிருக்கும் தமிழர்களுக்கு உதவி எண்களை தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான்-இடையே தற்போது ஏற்பட்டுள்ள போர் காரணமாக ஈரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், ஓமன், சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இதன் காரணமாக அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பைக் கருதி, பயணங்களைத் தவிர்க்கவும், முடிந்தவரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும், இந்தியத் தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தலின்படி செயல்படவும் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சராக, வளைகுடா நாடுகளில் வசித்து வரும் நம் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். அங்குள்ள தமிழர்களின் நிலைமையை உடனுக்குடன் அறிந்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்காக, தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறைக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, நிலைமை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு, அங்குள்ள தமிழர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, நிலைமையைக் கண்காணித்து வருகிறது. அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் தயார் நிலையில் உள்ளது.
போர்ப் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், அவர்கள் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் 24x7 கட்டணமில்லா உதவி எண்களையோ அல்லது புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தின் கட்டுப்பாட்டு அறையினையோ தொடர்புகொள்ளலாம்.
தங்கள் பகுதிகளில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
புதுடெல்லி கட்டுப்பாட்டு அறையின் உதவி எண்கள் 011-24193300 (Land line) 92895 16712 (Mobile Number with Whatsapp)
அயலகத் தமிழர் நலத்துறையின் உதவி எண்கள்:
இந்தியாவிற்குள் - 1800 309 3793 வெளிநாடு - +91 80 6900 9900 (Missed Call) தொடர்புக்கு - +91 80 6900 9901 என உதவி எண்களை பதிவிட்டுள்ளார்.
- மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் மின் அஞ்சல் அனுப்பியுள்ளார்.
- அதில், வளைகுடா வாழ் இந்தியர்களைப் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி:
வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுதொடர்பாக, விஜய் வசந்த் எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது:
சமீபத்திய ராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து வளைகுடா பகுதியில் மோசமடைந்து வரும் அரசியல் சூழ்நிலை குறித்து எனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமீபத்திய தகவல்களின்படி, ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் பதிலடி நடவடிக்கைகள் ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன் மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகளை பாதித்துள்ளன. இதனால் பாதுகாப்பு எச்சரிக்கைகள் அதிகரிப்பு, விமானப் போக்குவரத்து பாதிப்பு மற்றும் பொதுமக்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த திடீர் பதற்ற நிலை, அங்கு வாழ்ந்து வேலை செய்து வரும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கும், அதில் பெரும்பங்கு வகிக்கும் தமிழகத்தைச் சார்ந்தவர்களுக்கும் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு அச்சம் மற்றும் நிலையற்ற சூழ்நிலை உருவாக்கியுள்ளது. சில பகுதிகளில் குண்டு சத்தங்கள் கேட்கப்பட்டதுடன், அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால், மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழ்நிலையில், இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வெளியுறவு அமைச்சகம் உடனடி மற்றும் முன்கூட்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்:
பாதிக்கப்பட்ட அனைத்து இந்திய தூதரகங்களிலும் அவசர ஒத்துழைப்பு மையங்களை அமைத்தல், தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் நேரடி அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குதல், இந்திய தொழிலாளர்களுக்கான தனிப்பட்ட உதவி எண்களை செயல்படுத்தி, விரைவான தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும்.
நிலைமை மோசமடைந்தால் அவசர வெளியேற்றத்திற்கான முன்னெச்சரிக்கை திட்டங்களை தயார் செய்தல், இந்தியர்களின் பாதுகாப்பு, தங்குமிடம் மற்றும் அத்தியாவசிய தேவைகள் உறுதிசெய்ய அந்த நாடுகளுடன் தூதரக மட்டத்தில் தொடர்பை ஏற்படுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இந்த அவசரமான சூழ்நிலையில், இந்திய குடிமக்களுக்கு நம்பிக்கை அளித்து, அவர்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உடனடி தலையீட்டை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இந்த நெருக்கடியான நேரத்தில் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் இந்திய அரசு விரைவாகவும், உறுதியுடனும் செயல்படும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
- ரன்வீர் சிங் உடன் சஞ்சய் தத், அக்ஷய் கன்னா, ஆர். மாதவன் மற்றும் அர்ஜுன் ராம்பால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
- 'ரா' மேற்கொண்ட ரகசியப் பணிகளை அடிப்படையாகக் கொண்டது.
பாலிவுட்டில் ரன்வீர் சிங்கின் புதிய ஸ்பை திரில்லர் படமான 'துரந்தர்' இந்தியாவில் பாக்ஸ் ஆபிஸில் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
ரன்வீர் சிங் உடன் சஞ்சய் தத், அக்ஷய் கன்னா, ஆர். மாதவன் மற்றும் அர்ஜுன் ராம்பால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
உரி: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' புகழ் ஆதித்ய தார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தக் கதை பாகிஸ்தானில் 'ஆபரேஷன் லியாரி' மற்றும் இந்திய உளவுத்துறை நிறுவனமான 'ரா' மேற்கொண்ட ரகசியப் பணிகளை அடிப்படையாகக் கொண்டது.
வெளியான ஒரு வாரத்திற்குள் இந்தியாவில் இந்தப் படம் ரூ. 200 கோடி நிகர வசூலைத் தாண்டியது. வளைகுடா நாடுகளை தவிர மற்ற வெளிநாட்டுச் சந்தைகளில் ரூ. 44.5 கோடியை வசூலித்தது.
இந்த படம் பாகிஸ்தானுக்கு எதிரான செய்தியைக் கொண்டிருப்பதாகக் கூறி ஆறு வளைகுடா நாடுகள் படத்தைத் தடை செய்துள்ளன.
பாலிவுட் படங்களுக்கு வளைகுடா பகுதி ஒரு முக்கியமான சந்தையாகும். இந்த சூழலில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், குவைத், ஓமன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் அதிகாரிகள் படத்தின் கருப்பொருளை எதிர்த்து அதன் வெளியீட்டிற்கு அனுமதி மறுத்தனர்.
முன்னதாக 'ஃபைட்டர்', 'டைகர் 3', 'ஆர்டிகிள் 370' மற்றும் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' போன்ற படங்களும் கடந்த காலங்களில் வளைகுடா நாடுகளில் இதேபோன்ற தடைகளைச் சந்தித்துள்ளன.
- சீசன் காலங்களில் விமான கட்டணம் திடீரென அதிகரிக்கப்படுவது அவர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
- இது தொடர்பாக விருப்பம் உள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தது.
திருவனந்தபுரம்:
கேரளாவைச் சேர்ந்த மலையாள மக்கள் வளைகுடா நாடுகளில் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் சொந்த ஊருக்கு வருவதற்கு விமான சேவையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சீசன் காலங்களில் விமான கட்டணம் திடீரென அதிகரிக்கப்படுவது அவர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு கப்பல் சேவையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதையடுத்து கேரள கடல்சார் வாரியம் விழிஞ்சம், கொல்லம், பேப்பூர் மற்றும் அழிக்கால் துறை முகங்களில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு கப்பல் சேவைகளை இயக்க முடிவு செய்தது. இது தொடர்பாக விருப்பம் உள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தது.
அதன்பேரில் கப்பல் சேவைகளை தொடங்க 4 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக கேரள கடல்சார் வாரியத் தலைவர் என்.எஸ்.பிள்ளை தலைமையில் கொச்சியில் நாளை (27-ந் தேதி) முதல் கட்ட விவாதம் நடைபெற உள்ளது. இந்த கப்பல் சேவை தொடங்கப்பட்டால், பயண நேரம் அதிகரித்தாலும், அதிக சரக்குகளை கொண்டு செல்லமுடியும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.






