செய்திகள்

பங்கு சந்தையில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி முதலீட்டை அதிகரிக்க முடிவு: மத்திய மந்திரி தகவல்

Published On 2017-05-28 20:17 GMT   |   Update On 2017-05-28 20:17 GMT
ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் பங்கு சந்தையில் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.
ஐதராபாத்:

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது (இ.பி.எப்.ஓ.), பங்கு சந்தையில் முதலீடு செய்து வருகிறது. அதன்படி கடந்த 2015-16-ம் நிதியாண்டில் ரூ.6,577 கோடியும், 2016-17-ம் நிதியாண்டில் ரூ.14,982 கோடியும் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. மொத்தத்தில் கடந்த மாதம் வரை ரூ.22,858 கோடி முதலீடு செய்யப்பட்டு, 13.72 சதவீத வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது.

இந்த முதலீட்டை நடப்பு நிதியாண்டில் மேலும் அதிகரிக்க இ.பி.எப்.ஓ. முடிவு செய்துள்ளது. குறிப்பாக இந்த நிதியாண்டில் ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் பங்கு சந்தையில் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார். இதற்கான முடிவை மத்திய அறங்காவலர் குழு எடுத்து இருப்பதாகவும் அவர் கூறினார்.



இதன் மூலம் முதலீட்டுத்தொகை 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்படுவதாக கூறிய தத்தாத்ரேயா, இது தொடர்பான அறிவிப்பை தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் விரைவில் வெளியிடும் எனவும் தெரிவித்தார். 
Tags:    

Similar News