செய்திகள்

பஞ்சாப்பில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 42 சதவீதம் பேர் தோல்வி

Published On 2017-05-24 06:32 GMT   |   Update On 2017-05-24 06:32 GMT
பஞ்சாப் மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் மிக குறைவாக உள்ளது.
சண்டிகார்:

பஞ்சாப் மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், மாணவ- மாணவிகளின் தேர்ச்சி மிகவும் குறைவாக உள்ளது.

மொத்தம் 3 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். அதில், 1 லட்சத்து 90 ஆயிரம் மாணவர்ள் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

அதாவது 57.50 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 42.4 சதவீதம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு தான் தேர்ச்சி விகிதம் மிக குறைவாக உள்ளது.

இது தொடர்பாக முதல்-மந்திரி அம்ரீந்தர்சிங் கல்வித்துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். கல்வி தரத்தை மேம்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கும்படி அவர் உத்தரவிட்டார்.

மேலும் கல்வித்துறை மந்திரி அருணா சவுத்ரியிடம் கல்வி தரம் மேம்பாடு அடைய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து திட்டங்களை தயாரித்து அனுப்பும்படி உத்தரவிட்டுள்ளார்.

மாணவர்களின் கல்வித் தரம் குறைந்ததற்கு முந்தைய அகாலி தளம்- பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியே காரணம் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
Tags:    

Similar News