செய்திகள்

சத்தீஷ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் 120 டிகிரி வெயில்

Published On 2017-05-24 05:32 GMT   |   Update On 2017-05-24 05:33 GMT
சத்தீஷ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் நாட்டிலேயே அதிகபட்சமாக 120 டிகிரி வெயில் கொளுத்தியது.இதுவே இந்தஆண்டின் அதிகபட்ச வெயில் அளவு ஆகும்.

ராய்ப்பூர்:

நாடு முழுவதும் கோடை வெயிலின் உக்கிரம் மக்களை வாட்டி எடுக்கிறது. தென் மாநிலங்களைவிட வட மாநிலங்களில் வெப்பம் கடுமையாக இருக்கிறது.

வட மாநிலங்களின் பல நகரங்களில் வெயில் அளவு 110 டிகிரியை தாண்டியது. அதிக பட்சமாக சத்தீஷ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் நேற்று முன்தினம் 120.74 டிகிரி வெயில் கொளுத்தியது. இதுவே இந்தஆண்டின் அதிகபட்ச வெயில் அளவு ஆகும்.

இதன் காரணமாக அனல் காற்று வீசியது. மக்கள் வெளியே நடமாட முடியாமல் வீடுகளில் முடங்கி கிடந்தனர். சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.

கடந்த சில நாட்களாகவே பிலாஸ்பூரில் 111 முதல் 116 டிகிரிவரை வெப்பம் பதிவானது. இந்த நிலையில் வெப்பம் படிப்படியாக அதிகரித்து 120 டிகிரியை தாண்டியது.


அன்றைய தினம் 120 கி.மி. தொலைவில் உள்ள தலைநகர்ராய்ப்பூரில் 113 டிகிரி வெப்பம் பதிவானது. இதே போல் சத்தீஷ்கர் முழுவதும் கடும் வெப்பம் நிலவியது. தொடர்ந்து வெப்பம் நீடிக்கும் என்றும் 26,27-ந் தேதிகளில் வெப்பச்சலனத்தால் இடி- மின்னலுடன் மழை பெய்யும் என்றும் உள்ளூர் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News