செய்திகள்

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி கொடி நாட்டிய இந்திய கடற்படை வீரர்

Published On 2017-05-20 22:03 GMT   |   Update On 2017-05-20 22:03 GMT
உலகின் மிக உயர்ந்த சிகரமாக எவரெஸ்டில் ஏறிய முதல் இந்திய கடற்படை வீரராக ப்ரீஸ் ஷர்மா என்பவர் சாதனை படைத்துள்ளார்.
காத்மண்டு:

உலகின் மிக உயர்ந்த சிகரமாக எவரெஸ்டில் ஏறிய முதல் இந்திய கடற்படை வீரராக ப்ரீஸ் ஷர்மா என்பவர் சாதனை படைத்துள்ளார்.

நேபாளம் நாட்டிலுள்ள எவரெஸ்ட் சிகரமானது உலகின் மிக உயரமான சிகரமாக உள்ளது. 8848 அடி உயரமுள்ள இந்த சிகரத்தில் ஏறும் முயற்சியில் உலகம் முழுவதுமிருந்து வந்திருக்கும் சாகச விரும்பிகள் ஈடுபடுவர். இதற்கென, அந்நாட்டு அரசு சிறப்பு திட்டங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்திய கடற்படை வீரர் ப்ரீஸ் சர்மா ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், நேற்று அவர் சிகரத்தின் உச்சியை அடைந்து சாதனை படைத்துள்ளார். இந்திய கடற்படை வீரர் ஒருவர் எவெரெஸ்டில் ஏறி சாதனை படைப்பது இதுவே முதன்முறையாகும். கடந்த 2015-ம் ஆண்டில் சர்மா ஏற்கனவே எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியை மேற்கொண்டார். ஆனால், அப்போது கடுமையான பனிப்புயல் வீசியதால் அவரது பயணத்தில் தடை ஏற்பட்டது. இதனால், அவர் தனது பயணத்தை கைவிட்டார்.

தற்போது, விடா முயற்சியாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி ப்ரீஸ் சர்மா சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை புரிந்ததற்கு சமூக வலைதளங்களில் சர்மாவிற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
Tags:    

Similar News