செய்திகள்

உத்தரகாண்ட்: பத்ரிநாத் புனித யாத்திரைக்கு செல்லும் பாதையில் கடும் நிலச்சரிவு - 15000 பக்தர்கள் பாதிப்பு

Published On 2017-05-19 20:41 GMT   |   Update On 2017-05-19 20:41 GMT
உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் கோவிலுக்கு புனித யாத்திரை செல்லும் பாதையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சுமார் 15000 பக்தர்கள் தவித்துவருகின்றனர்.
டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலத்தின் மலைப்பிரதேசமான பத்ரிநாத்தில் உள்ள கோயிலுக்கு பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ள விஷ்ணுபிரயாக் என்ற பகுதியில் திடீரென நேற்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

பத்ரிநாத் கோவிலுக்கு செல்லும் பாதை தடைபட்டுள்ளதால் பக்தர்கள் மேற்கொண்டு பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பத்ரிநாத் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கித் தவித்துவருகின்றனர்.



பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் மீட்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

கடந்த 2013-ம் ஆண்டில் இம்மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 1000-க்கும் மேற்பட்டோர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
Tags:    

Similar News