செய்திகள்

இந்தியாவை ஆக்கிரமித்துள்ள வெளிநாட்டு சந்தையை பதஞ்சலி காலிசெய்யும் - பாபா ராம்தேவ்

Published On 2017-04-30 21:20 GMT   |   Update On 2017-04-30 21:20 GMT
இந்தியாவை ஆக்கிரமித்துள்ள வெளிநாட்டு பொருட்களை பதஞ்சலி தயாரிப்பு பொருட்கள் இன்னும் 5 ஆண்டுகளில் காலி செய்யும் என அந்நிறுவனத்தின் அதிபர் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் சாரன்பூரில் நடைபெற்ற யோகி பாரத் பூஷன் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று பேசிய யோகா குரு பாபா ராம்தேவ் ,” மற்ற வெளிநாட்டு பொருட்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்களிக்கவில்லை. மாறாக, இந்திய சந்தையை வேகமாக மாற்றி வருகின்றன. ஆனால், பதஞ்சலி பொருட்கள் இந்தியாவின் சந்தை பொருளாதாரத்தை வளப்படுத்துவதோடு விவசாயிகளின் நலன் காக்க செயல்பட்டு வருகின்றது” எனத் தெரிவித்தார்.

மேலும், “ இன்னும் ஐந்தாண்டுகளின் இந்திய சந்தையை ஆக்கிரமித்துள்ள வெளிநாட்டு பொருட்களை பதஞ்சலி காலி செய்து விடும். நாங்கள் பதஞ்சலி தயாரிப்பு பொருட்களுக்கு தரமான விலையை நிர்ணயம் செய்துள்ளோம்.” எனவும், யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு மக்களிடம் நல்ல இணக்கமான சூழலை உருவாக்கியுள்ளதாகவும் ராம்தேவ் தெரிவித்தார்.

சமீபத்தில் பதஞ்சலி தயாரிப்பில் சில பொருட்கள் தரச்சான்றின்மை சோதனையில் தோல்வியடைந்ததால் ராணுவ கேன்டீன்களில் அப்பொருட்கள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News