இந்தியா
null

ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்ட விவகாரம் - பிபவ் குமாருக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன்

Published On 2024-05-16 14:45 IST   |   Update On 2024-05-16 23:31:00 IST
  • தேசிய மகளிர் ஆணையம் இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்து உடனடியான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று டெல்லி காவல்துறையை வலியுறுத்தியிருந்தது.
  • இந்த விவகாரத்தில் ஸ்வாதி மலிவாலின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகள் இல்லத்துக்கு விரைந்துள்ளனர்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து அவரது தனிச் செயலாளர் பிபவ் குமார் தன்னைத் தாக்கியதாக ஆம் ஆத்மி காட்சியைச் சேர்ந்த மாநிலங்களைவை பெண் எம்.பி ஸ்வாதி மலிவால் கடந்த மே 13 ஆம் தேதி காலை டெல்லி போலீசிடம் போன் மூலம் முறையிட்டார். இதனையடுத்து டெல்லி காவல்துறையினர் இந்த குற்றச்சாட்டு குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து தொடக்கத்தில் மௌனம் காத்துவந்த ஆம் ஆத்மி கட்சி பின்னர் ஸ்வாதி தாக்கப்பட்டது உணமைதான் எனவும், இந்த விவகாரத்தில் குறித்து கெஜ்ரிவால் கடுமையான நடவடிக்கை எடுப்பார் எனவும் விளக்கமளித்திருந்தது. .மேலும் பிபவ் குமார் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே டெல்லி பாஜகவினர் இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி அரசியல் ரீதியாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

தேசிய மகளிர் ஆணையம் இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்து உடனடியான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று டெல்லி காவல்துறையை வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பிபவ் குமார் நாளை (மே 17) வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் மகளிர் ஆணையத்தின் முன் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

 

மேலும் பிபவ் குமார் ஆஜராக தவறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஸ்வாதி மலிவாலின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகள் அவரது இல்லத்துக்கு விரைந்துள்ளனர்.  

Tags:    

Similar News