செய்திகள்

ஒரு கோடி ரூபாய் கொக்கைனுடன் ஐதராபாத் ரெயில் நிலையத்தில் நைஜீரியா ஆசாமி கைது

Published On 2017-04-29 05:01 GMT   |   Update On 2017-04-29 05:01 GMT
டெல்லியில் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயினை பெங்களூருவுக்கு கடத்த முயன்ற வெளிநாட்டவரை ஐதராபாத் ரெயில் நிலையத்தில் அதிகாரிகள் கைது செய்தனர்.
ஐதராபாத்:

டெல்லியில் இருந்து ஐதராபாத் வழியாக பெங்களூருவுக்கு சிலர் கொடிய போதைப் பொருளான கொக்கைனை கடத்தவுள்ளதாக போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஐதராபாத் நகர போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் டெல்லியில் இருந்து வந்த செகந்திராபாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயினை பெங்களூருவுக்கு கடத்த முயன்ற நைஜீரியா நாட்டவரை அவர்கள் கைது செய்தனர்.



பிடிப்பட்ட நபர் கடந்த 2012-ம் ஆண்டு சுற்றுலா விசாவில் நைஜீரியாவில் இருந்து டெல்லி வந்துள்ளார். விசா காலம் காலாவதியான பின்னரும் சட்ட விரோதமாக டெல்லியில் தங்கியிருந்த இவர், போதைப் பொருள்களை ரகசியமாக கடத்தி விற்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது

பெங்களூரில் இருக்கும் ஒரு வியாபாரியிடம் ஒப்படைப்பதற்காக 200 கிராம் அளவிலான கொக்கைனை மறைத்து கடத்திவந்த இவர் காலாவதியான தனது பாஸ்போர்ட்டில் தில்லுமுல்லு செய்து அதை வைத்து இந்தியாவில் தங்கியிருந்ததும் விசாரணையில் வெட்ட வெளிச்சம் ஆனது.

கைது செய்யப்பட்ட நபரை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்திய அதிகாரிகள் அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

Tags:    

Similar News