செய்திகள்

சத்தீஷ்காரில் 24-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட் உடல் மீட்பு

Published On 2017-04-29 03:40 GMT   |   Update On 2017-04-29 03:40 GMT
சத்தீஷ்காரில் நிகழ்ந்த துப்பாக்கி சண்டையின் போது ரிசர்வ் படையினரின் தாக்குதலில் தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் ஒரு நக்சலைட்டின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
ராய்ப்பூர்:

சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டத்தின் பர்காபல் பகுதியில் கடந்த 24-ந்தேதி சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரை சுற்றி வளைத்து நக்சலைட்டுகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் தமிழகத்தை சேர்ந்த 4 ரிசர்வ் போலீஸ் படையினர் உள்பட 25 பேர் வீர மரணம் அடைந்தனர்.

இந்த தாக்குதலின்போது ரிசர்வ் படையினரும் சுதாரித்து கொண்டு பதிலடி கொடுத்தனர். இந்த நிலையில் துப்பாக்கி சண்டை நடந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் ஒரு நக்சலைட்டின் உடல் நேற்று முன்தினம் இரவு மீட்கப்பட்டது.

ரிசர்வ் படையினரின் தாக்குதலில் மேலும் சில நக்சலைட்டுகள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் அவர்களுடைய உடல்களை சக நக்சலைட்டுகள் அங்கிருந்து அப்புறப்படுத்தி அடர்ந்த காட்டுக்குள் கொண்டு சென்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

Tags:    

Similar News