செய்திகள்

பினராயி விஜயன் தலைக்கு விலை: ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி நீக்கம்

Published On 2017-03-04 02:51 GMT   |   Update On 2017-03-04 02:51 GMT
கேரள முதல்வரின் தலையை கொண்டு வருவோருக்கு பரிசு வழங்கப்படும் என்று சந்திராவத் பேசியதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், அவரை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி ஆர்.எஸ்.எஸ். தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
போபால்:

கேரளாவில் நடந்துள்ள ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் படுகொலையையொட்டி, மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி குந்தன் சந்திராவத் கொந்தளித்தார்.

அவர் இந்த படுகொலைக்காக மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைக்கு ரூ.1 கோடி விலை வைத்தார். பினராயி விஜயன் தலையை கொண்டு வந்தால், தனது சொத்துகளை விற்று ரூ.1 கோடி பரிசு அளிப்பேன் என அவர் கூறியது, பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.



இதையடுத்து குந்தன் சந்திராவத் தனது கருத்துக்காக வருத்தம் தெரிவித்தார்.

இது குறித்து அவர் விடுத்த அறிக்கையில், “ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் படுகொலை, எனக்கு மிகுந்த மன வேதனையை அளித்தது. எனவேதான் உணர்ச்சிவசப்பட்டு அப்படி கூறினேன். நான் அதை திரும்பப்பெறுகிறேன். வருத்தமும் தெரிவிக்கிறேன்” என கூறி உள்ளார்.

ஆனாலும் அவரை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி ஆர்.எஸ்.எஸ். தலைமை நேற்று நடவடிக்கை எடுத்துள்ளது.

Similar News