செய்திகள்

ராகுல்காந்தியின் மனநிலையை புரிந்து கொள்ளவே முடியவில்லை: மனோகர் பாரிக்கர்

Published On 2016-12-16 23:47 GMT   |   Update On 2016-12-16 23:47 GMT
ராகுல் காந்தியின் மனநிலையை புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று மத்திய பாதுகாப்பு துறை மந்திரி மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
பானஜி:

பண மதிப்பிழக்க நடவடிக்கையால் பாராளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடர் முழுவதும் முடங்கிப் போனது. தொடர் முழுவதும் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி ஆகிய எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுப்பட்டனர்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை மீது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வந்தார்.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் மனநிலையை புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று மத்திய பாதுகாப்பு துறை மந்திரி மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பானஜி நகரில் பாரிக்கர் கூறியதாவது:-

ராகுல் காந்தியின் மனநிலை என்னவென்று எனக்கு தெரியவில்லை. அவரது கட்சி பாராளுமன்றத்தை முடக்குகிறது. அவர் பாராளுமன்றத்திற்கு வெளியே பத்திரிக்கையாளர்களை சந்தித்து பிரதமர் மோடி மீது தவறான குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார்.

பாராளுமன்றத்தை முடக்கச் சொல்லி உங்களை யார் சொன்னது?. ஒரு மாத காலமாக எங்களுக்கு போர் அடித்து வந்தது. பாராளுமன்றத்தில் வெறுமனே உட்கார்ந்து உங்களது கூச்சல்களை கேட்டு வந்தோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Similar News