செய்திகள்

அத்வானி பிறந்தநாள்: பிரதமர் மோடி, அமித்ஷா நேரில் சந்தித்து வாழ்த்து

Published On 2016-11-08 04:57 GMT   |   Update On 2016-11-08 04:57 GMT
பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பிறந்த நாளை முன்னிட்டு, அவரை பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தலைவர் அமித்ஷா ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
புதுடெல்லி:

பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் இந்தியாவின் முன்னாள் துணை பிரதமருமான அத்வானி இன்று தனது 89-வது நாளை கொண்டாடுகிறார்.

அத்வானியின் பிறந்த  நாளையொட்டி  அவரை பிரதமர் நரேந்திர மோடி, நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது கட்சியின் தலைவர் அமித்ஷா உடன் இருந்தார்.



முன்னதாக  தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், “எங்களது வழிகாட்டியும் முன்னோடியுமான எல். கே. அத்வானி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்தியாவின் மிக உன்னத தலைவரான அத்வானி நம் நாட்டின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டு சேவையாற்றியுள்ளார். அத்வானி நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளையும் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் " என்று மோடி கூறியுள்ளார்.

அதேபோல் அத்வானிக்கு பா.ஜ.க.வின் பல்வேறு முக்கிய தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Similar News