உள்ளூர் செய்திகள்

கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கு வெட்கிரைண்டர் ஏற்றுமதி அதிகரிப்பு

Published On 2024-05-26 05:45 GMT   |   Update On 2024-05-26 05:45 GMT
  • கோவை மாவட்டத்தில் நேரடியாகவும், மறைமுகமாவும் 30 ஆயிரம் பேர் இத்தொழிலில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
  • துபாய், சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வணிக ரீதியான வெட்கிரைண்டர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கோவை:

தொழில் நகரமான கோவை வெட்கிரைண்டர்கள் ஏற்றுமதியில் சிறந்து விளங்குகிறது.

தமிழகம் மட்டுமின்றி தேசிய மற்றும் சர்வதேச அளவில் தேவைப்படும் அனைத்து வகையான கிரைண்டர்களும் கோவை மற்றும் சென்னையில் செயல்படும் தொழில் நிறுவனங்களில் இருந்துதான் அனுப்பப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் நேரடியாகவும், மறைமுகமாவும் 30 ஆயிரம் பேர் இத்தொழிலில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

வீட்டு பயன்பாடுகளுக்கு மட்டுமின்றி ஓட்டல், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சமைக்க தேவையான வணிக ரீதியான பெரிய அளவிலான கிரைண்டர்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது ஏற்றுமதி சிறப்பாக உள்ளதாகவும், உள்நாட்டில் விற்பனை மந்தமாக உள்ளதாகவும் தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்த கோவையைச் சேர்ந்த ஏற்றுமதியாளர் ஒருவர் கூறியதாவது:-

கோவையில் இருந்து துபாய், சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வணிக ரீதியான வெட்கிரைண்டர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஏற்றுமதியில் நிலையான வளர்ச்சி காணப்படுகிறது.

துபாயில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் அங்கு பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வந்த வணிக ரீதியிலான கிரைண்டர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன. இதனால் உடனடியாக கோவை மாவட்டத்துக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

கோவையில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து மட்டும் 20 கிலோ எடையிலான கிரைண்டர்கள் தயாரிக்கப்பட்டு ஒரு கண்டெய்னரில் அனுப்பி வைக்கப்பட்டன. தவிர நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளில் வழக்கமாக வரும் பணி ஆணைகள் நிலையாக உள்ளன.

இவ்வாறு அவர் கூறனார்.

Tags:    

Similar News