LPG Shortage| வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: திருப்பூரில் மூடப்படும் பிரியாணி கடைகள்
- அதிக விலை கொடுத்து வாங்க முடியாத சிறு வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
- ஒரு சிலர் விறகு அடுப்பு மூலம் சமைப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர்.
திருப்பூர்:
பின்னலாடை நகரமான திருப்பூரில் கடந்த சில நாட்களாக வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதன் எதிரொலியாக மாவட்டத்தில் உள்ள ஏராளமான பிரியாணி கடைகள் மற்றும் சிறிய உணவகங்கள் போதிய சிலிண்டர் விநியோகம் இல்லாததால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
சாதாரணமாக ரூ.1700 முதல் 2,000 வரையில் விற்பனை செய்யப்படும் வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக தற்போது ரூ.3,500 முதல் 4,000 வரை விற்பனை செய்கின்றனர். அதிக விலை கொடுத்து வாங்க முடியாத சிறு வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இதனால் கடந்த 2 நாட்களாக மங்களம் சாலை , டவுன் ஹால், பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் சில பிரியாணி கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தற்போது விற்பனை செய்யும் விலைக்கு ஏற்ப சிலிண்டர் வாங்கி சமைத்து விற்பனை செய்யும்பட்சத்தில் நஷ்டமே ஏற்படும் என கடைகளை பூட்டியுள்ளனர். இதனால் தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சிலர் விறகு அடுப்பு மூலம் சமைப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர்.