செய்திகள்

3 நாள் பயணமாக பஹ்ரைன் புறப்பட்டார் ராஜ்நாத் சிங்

Published On 2016-10-23 13:19 GMT   |   Update On 2016-10-23 13:19 GMT
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக பஹ்ரைன் நாட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
புதுடெல்லி:

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக பஹ்ரைன் நாட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

இந்த பயணத்தின் போது பஹ்ரைனுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ராஜ்நாத் சிங் விவாதிக்க உள்ளார்.
இன்று பஹ்ரை தலைநகர் மணாமா செல்லும் ராஜ்நாத் சிங், அந்நாட்டு அரசர் ஹமத் பின் இசா அல் கலிஃபா, பிரதமர் கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபா, உள்துறை அமைச்சர் ரஷித் பின் அப்துல்லா அல் கலிஃபா ஆகியோரைச் சந்தித்துப் பேசுகிறார்.

இந்தச் சந்திப்பின்போது, ஜம்மு-காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளிப்பது தொடர்பான பிரச்னையை ராஜ்நாத் சிங் எழுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், குற்றவாளிகளைப் பிடிப்பதில் பரஸ்பரம் ஒத்துழைப்பது ஆகியவை தொடர்பாக, பஹ்ரைன் உள்துறை அமைச்சர் ரஷித் பின் அப்துல்லா அல் கலிஃபாவுடன் ராஜ்நாத் சிங் விவாதிக்க உள்ளார்.

பஹ்ரைனில் உள்ள இந்தியர்கள் இடையே ராஜ்நாத் சிங் உரையாற்ற உள்ளார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் பஹ்ரைன் முக்கிய இடம் வகித்து வருகிறது. இந்த அமைப்பில் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News