செய்திகள்

ராஜஸ்தானில் இந்திய விமானப்படை பயிற்சி விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது

Published On 2016-09-10 09:09 GMT   |   Update On 2016-09-10 09:16 GMT
இந்திய விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் தரையில் மோதி விபத்துக்குள்ளானது.
ஜெய்ப்பூர்:

இந்திய விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் தரையில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ.ஜி.21 டி-69 ரக பயிற்சி விமானம் ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டத்தில் உள்ள உட்டாலாய் விமானத்தளத்தில் இருந்து பறந்துச் சென்று இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.

விமானத்தளத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் பறந்தபோது மலியோ கி தானி என்ற இடத்தில் அந்த விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. விமானம் தரையில் விழுவதற்கு முன்னர் பாராசூட் மூலம் அதில் சென்ற விமானிகள் இருவரும் கீழே குதித்து உயிர் தப்பியதாக தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்த விமானப்படை உயரதிகாரிகள் இந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Similar News