செய்திகள்

நேரலை வீடியோக்களுக்கென பிரத்தியேக ஸ்மார்ட்போன்: பட்ஜெட் விலையில் அறிமுகம்

Published On 2017-05-24 11:16 GMT   |   Update On 2017-05-24 11:16 GMT
இந்தியாவில் நேரலை வீடியோக்களுக்கு என பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள சென்போன் லைவ் எனும் புதிய ஸ்மார்ட்போனினை அசுஸ் வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:

அசுஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளது. சென்போன் லைவ் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் நேரலை வீடியோக்களுக்கு என பிரத்தியேக செயலி வழங்கப்பட்டுள்ளது.  

பியூட்டிலைவ் எனும் பில்ட்-இன் செயலி கொண்டுள்ள சென்போன் லைவ், பிரைமரி மற்றும் செல்ஃபி கேமராக்களில் பியூட்டி ஃபில்ட்டர்களை வழங்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் நேரலை வீடியோக்களிலும் வேலை செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பியூட்டி லைவ் அம்சம் போனின் மைக்ரோபோன்களின் உதவியோடு பின்னணியில் ஏற்படும் சத்தத்தை தானாகவே நீக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அசுஸ் சென்போன் லைவ் சிறப்பம்சங்கள்:

* 5.0 இன்ச் எச்டி ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
* குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 400 பிராசஸர்
* 13 எம்பி பிரைமரி கேமரா
* 5 எம்பி செல்ஃபி கேமரா
* 2 ஜிபி ரேம்
* 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* 4ஜி எல்டிஇ
* டூயல் சிம் ஸ்லாட்
* 2650 எம்ஏஎச் பேட்டரி

அசுஸ் சென்போன் லைவ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.9,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News