செய்திகள்

புதுவை பாராளுமன்ற தொகுதியில் வைத்திலிங்கத்தை எதிர்த்து டாக்டர் நாராயணசாமி

Published On 2019-03-22 05:55 GMT   |   Update On 2019-03-22 05:55 GMT
புதுவை பாராளுமன்ற தொகுதியில் வைத்திலிங்கத்தை எதிர்த்து டாக்டர் நாராயணசாமி போட்டியிடுகிறார். #Parliamentelection

புதுச்சேரி:

புதுவை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் வேட்பாளராக சபாநாயகர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார்.

இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் மேலிடம் முறைப்படி அறிவிக்கா விட்டாலும் வைத்திலிங்கம் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தல் களத்தில் இறங்கி உள்ளார்.

அவர் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். மேலும் வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.

அ.தி.மு.க. கூட்டணியில் புதுவை பாராளுமன்ற தொகுதி என்.ஆர். காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது.

என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. கேசவனின் மகன் டாக்டர் நாராயணசாமி போட்டியிடுவார் என்ற தகவல் வெளியாகி இருந்தது, ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதிய ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் கூட்டம் இன்று காலை ஓட்டல் அண்ணாமலையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் நாராயணசாமியை என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், புதுவை முன்னாள் முதல்- அமைச்சருமான ரங்கசாமி அறிமுகப்படுத்தினார். அவருக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து டாக்டர் நாராயணசாமி புதுவை வழுதாவூர் சாலையில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி அருணிடம் டாக்டர் நாராயணசாமி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். #Parliamentelection

Tags:    

Similar News