உள்ளூர் செய்திகள்

கந்துவட்டி

கந்துவட்டி குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும்-பா.ம.க.

Published On 2022-06-12 09:36 GMT   |   Update On 2022-06-12 09:36 GMT
  • கந்துவட்டி குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தியுள்ளது.
  • ஏழை அப்பாவி தொழிலாளர்கள் காப்பாற்றப்படுவார்கள்.

சிவகாசி

விருதுநகர் மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் டேனியல், விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் சிவகாசி பகுதியில் கந்து வட்டிக்காரர்கள் தரும் தொல்லை அதிகளவில் உள்ளது. இது குறித்து புகார் கொடுக்க பாதிக்கப்பட்டவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். அதனால் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் தொழிலாளர்களை வஞ்சித்து வரும் கந்துவட்டி கும்பல் குறித்து யாரும் புகார் அளிக்க முன்வருவதில்லை.

அதனால் மாவட்ட போலீஸ் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து புகார்கள் வாங்க மாவட்ட அளவில் அல்லது தாலுகா அளவில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும். இதில் கொடுக்கப்படும் மனுக்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடி பார்வையில் விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் கந்து வட்டிக் காரர்களின் பிடியில் இருந்து ஏழை அப்பாவி தொழிலாளர்கள் காப்பாற்றப்படுவார்கள்.

துப்புரவு பணியில் ஈடுபட்டு வரும் பல தொழிலாளர்களின் ஏ.டி.எம். கார்டுகளை கந்துவட்டி கும்பல் பறித்து கொண்டு வட்டி வசூல் செய்வதாக தகவல் வருகிறது. இதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News