உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில்: ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடக்கும் வளர்ச்சி திட்டப்பணிகள்: கலெக்டர் ஆய்வு

Published On 2022-07-05 08:28 GMT   |   Update On 2022-07-05 08:28 GMT
  • விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடக்கும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
  • மகளிர் குழுக்களிடம் காய் கறிகள் விற்பனை குறித்த விவரம் கேட்டறிந்தார்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் ஊரக பகுதிகளில், மகளிர் குழுக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், பசுமைக்குடில், மரக்கன்று வளர்த்தல், தீவனப்புல் வளர்த்தல் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வை யிட்டு, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பாக செயல்படுத்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் மோகன் வேண்டுகோள் விடுத்தார். விழுப்புரம் மாவட்டம், ஓலக்கூர் ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட ஒலக்கூர் ஊராட்சியில், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வேளாண்மை உழவர் உற்பத்தி நலத்துறை ஆகிய துறைகளின் மூலம், மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை கலெக்டர் மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, கலெக்டர் மோகன், ஒலக்கூர் ஊராட்சியில், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம், தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ், பசுமைக்குடில் அமைத்து பல்வேறு வகையான மரக்கன்றுகள் வளர்த்து பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருவதுடன், அரசுக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டு, அங்கு பணிபுரியும் பணியாளர்களிடம் மக்களின் தேவைக்கேற்ப மரக்கன்றுகள் வளர்த்து வழங்க வேண்டும்.

அதேபோல், குறுங்காடு வளர்ப்பு திட்ட த்தில் நடவு செய்யும் மரக்க ன்றுகளில் நீண்டநாள் பயன்தரக்கூடிய பழவகை மரங்கள் நடவு செய்து பாதுகாத்திட வேண்டும் என பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். அதனை தொடர்ந்து, மகளிர் குழுக்கள் தரிசு நிலங்கள் மற்றும் அரசு புறம்போக்கு இடங்களில் பண்ணைத் தோட்டங்கள் அமைக்கப்பட்டு காய்கறிகள் விற்பனை செய்து வருவதை பார்வையிட்டதுடன், அங்கு பந்தல் மூலம் கோவை சாகுபடி செய்து வருவதை பார்வையிட்டார். மகளிர் குழுக்களிடம் காய் கறிகள் விற்பனை குறித்த விவரம் கேட்டறிந்தார். அப்பொழுது மகளிர் குழுவினை சேர்ந்தவர்கள் தங்களி டம் வியாபாரிகள் குறைவான விலைக்கு கேட்பதால் இலாபம் குறைவாக உள்ளது. வேளாண் விற்பனை மையம் மூலம் உழவர் சந்தையில் விற்பனை செய்தால் உரிய லாபம் கிடைக்கும் எனத் தெரிவித்தார்கள். அதனை தொடர்ந்து கலெக்டர் மோகன் ஊரக வளர்ச்சித்துறை உதவி திட்ட அலுவலரிடம் மகளிர் குழுக்களுக்கு தேவை யான உதவிகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு நேரடி யாக மகளிர் குழுக்கள் காய்கறிகள் விற்பனை செய்து பயன்பெறும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வள ர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், ஊரக வளர்ச்சி த்துறை உதவி திட்ட அலுவலர் சபானா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News