உள்ளூர் செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு

Published On 2022-07-30 10:09 GMT   |   Update On 2022-07-30 10:09 GMT
  • திருச்சி விமான நிலையத்தில் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்
  • குரங்கு அம்மை நோய் அறிகுறியுடன் வருபவர்களை

திருச்சி:

தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பரவலை தடுக்க திருச்சி, சென்னை, கோவை, மதுரை ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் மக்கள் நல்வாழ்வுதுறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் குரங்கு அம்மை நோய் பதவியதாக கண்டறியப்பட்ட 23 நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் மாதிரி எடுத்து தீவிர சோதனைக்குபட்படுத்த உத்தவிடப்பட்டுள்ளது.

அதன்படி, துபை, சிங்கப்பூர், அபுதாபி, கத்தார், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வரும் பயணிகளிடம் ஐசிஎம்ஆர் அறிவுத்தல்படி மத்திய,  மாநில அரசு சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் முன்னேற்பாடாக குரங்கு அம்மை நோயாளிக்கு சிகிச்சை அளிக்க திருச்சி அரசு மருத்துவமனையில் 8 படுக்கைகளுடன் தனி வார்டு தயார் நிலையில் உள்ளது.

இது குறித்து மாநில மருத்துவ குழுவின் ஒருங்கிணைப்பாளராக உள்ள மருத்துவர் கூறுகையில், வெ ளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு தினமும் 700 பேருக்கு மேல் வருகின்றனர். அதிகளவில் அரபு நாடுகளில் இருந்து திருச்சிக்கு வருவதால் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் மத்திய, மாநில அரசு உத்தரவுப்படி 2 சதவீதம் பேருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக் குட்படுத்தப்படுகிறது என்றார்.

Tags:    

Similar News