உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூரில் 37-வது கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் வருகிற 18-ந்தேதி நடக்கிறது

Published On 2022-09-16 10:45 GMT   |   Update On 2022-09-16 10:45 GMT
  • காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையில் நடைபெறுகிறது.
  • 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் :

திருப்பூா் மாநகரில் 37-வது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை)நடைபெறுகிறது.இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பூா் மாநகரில் 37-வது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையில் நடைபெறுகிறது. திருப்பூா் மாநகரில் 12 வயது முதல் 14 வயது வரையிலான 31,778 சிறாா்கள், 15 முதல் 18 வயது வரையிலான 42,300 இளம் சிறாா்கள், 18 வயதுக்கு மேற்பட்ட 8,67,420 போ் என மொத்தம் 9,41,498 போ் உள்ளனா். இதில் தற்போது வரையில் 8,14,972 பேருக்கு முதல் தவணையும், 6,28,984 பேருக்கு இரண்டாவது தவணையும், 61,987 பேருக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், 1,26,526 பேருக்கு முதல் தவணையும், 1,85,988 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட வேண்டியுள்ளது. ஆகவே, வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சிறப்பு முகாம் மூலமாக 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில், இரு தவணை தடுப்பூசிகள் செலுத்தி 6 மாதம் அல்லது 26 வாரம் நிறைவடைந்த நபா்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை(பூஸ்டர்) தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. ஆகவே, திருப்பூா் மாநகரில் உள்ள அரசு மருத்துவமனைகள், நகா்ப்புற சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், ெரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் சிறப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News