உள்ளூர் செய்திகள்

கலை நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.

ஊட்டச்சத்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

Published On 2022-09-05 06:07 GMT   |   Update On 2022-09-05 06:07 GMT
  • ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
  • விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

திருப்பூர் :

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நடுவச்சேரி கிராமத்தில் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலையில் வீடு வீடாக சென்று இயற்கை சார்ந்த உணவுகளை உட்கொள்ளும் போது உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

மாணவ செயலாளர்கள் அருள்குமார், அரவிந்தன், ரமேஷ், கோவிந்தராஜ், பூபதிராஜா ஆகியோர் தலைமையில் விழிப்புணர்வு நடனம், நாடகம் போன்ற கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனி, ஊராட்சி மன்ற உறுப்பினர் முருகேசன், நவீன்பிரபு மற்றும் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

Tags:    

Similar News