உள்ளூர் செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு தர்ம அடி

Update: 2022-06-30 10:39 GMT
  • போக்சோவில் கைது செய்யக் கோரி பெண்கள் வலியுறுத்தல்
  • 1 ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அருகே வேங்கடத்தான் பகுதியில் அரசு தொடக்கபள்ளி உள்ளது. இங்கு 1 ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 9 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்,

இங்குள்ள ஆசிரியர் ஒருவர் 5ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்ைல கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பள்ளி மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனடியாக தகவல் அறிந்து அப்பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் தகவலை தெரிவித்துள்ளனர்.

உடனடியாக உதவி கல்வி அலுவலர் மாதேஷ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணைக்காக நேரில் வந்தார் அங்கு மாணவியின் பெற்றோர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பெருமாள் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர்.

நடந்தவற்றை ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுத்தார் அங்கிருந்த பெண்கள் ஆத்திரமடைந்து ஆசிரியருக்கு தர்மஅடி கொடுத்தனர் உடனடியாக அங்கிருந்து அவரது மனைவியுடன் சென்றுவிட்டார், 1ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள பள்ளியில் மொத்தம் 9 மாணவ மாணவிகள் மட்டுமே உள்ளனர்.

இதனால் வகுப்பறையில் தனியாக பாடம் சொல்லிக் கொடுப்பதாக ஆசிரியர் அத்துமீறல்களில் ஈடுபடுகிறார் உடனடியாக இந்த பள்ளியை வேறு பள்ளியுடன் இணைத்து செயல்பட வைக்க வேண்டும்.

அவரை போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

Tags:    

Similar News