உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தூய்மைப்பணியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்த காட்சி.

கிரிவலப்பாதையில் தூய்மைப்பணி

Published On 2023-11-21 09:48 GMT   |   Update On 2023-11-21 09:51 GMT
  • அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்
  • 1000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்

வேங்கிக்கால்;

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்வான மகா தீப தரிசனம் நவம்பர் 26-ந்தேதி நடைபெற உள்ளது.

அதனை முன்னிட்டு பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வரும் கிரிவல பாதையை இன்று காலை தூய்மை அருணை தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் அதன் நிறுவனரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு தூய்மை செய்யும் பணியை தொடங்கி வைத்தார்.

தூய்மை அருணை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற இந்த தூய்மை பணியில் கலெக்டர் பா.முருகேஷ், கூடுதல் கலெக்டர் ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், சி.என். அண்ணாதுரை எம்.பி., நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், தொழிலாளர் நல மேம்பாட்டு பிரிவு அரசு பிரதிநிதி இரா. ஸ்ரீதரன், சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, ஒன்றிய குழு தலைவர்கள் கலைவாணி கலைமணி, பரிமளா கலையரசன், அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர் சி.ஜோதி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ராஜ்குமார், உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், கோட்டாட்சியர் மந்தாகினி, வட்டாட்சியர் தியாகராஜன், ஒப்பந்ததாரர்கள் துரை வெங்கட், ப்ரியா விஜயரங்கன் உட்பட 1000-க்கும் மேற்பட்ட தூய்மை அருணை உறுப்பினர்கள், அனைத்து துறை தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News