உள்ளூர் செய்திகள்

கொலை செய்யப்பட்ட தொழிலாளி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

Published On 2023-11-14 06:45 GMT   |   Update On 2023-11-14 06:45 GMT
  • மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், மணியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்றனர்.
  • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்துங்கநல்லூர்:

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகே உள்ள மணக்கரை கீழுரை சேர்ந்தவர் மணி (வயது 60). இவர் கூலித் தொழில் செய்து கொண்டு அவ்வப்போது ஆடு மேய்த்து வந்தார். இவருக்கு 2 மகன்கள், 4 மகள்கள் உள்னனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

இந்நிலையில் நேற்று மணக்கரை ஊருக்கு கீழ்புறம் உள்ள மாடசாமி கோவில் அருகே ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு, அருகில் இருந்த ஒரு வேப்பரத்தின் அடியில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், மணியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்றனர்.

இது தொடர்பாக முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட மணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை தொடர்பாக ரூரல் டி.எஸ்.பி. சுரேஷ் மற்றும் முறப்பநாடு இன்ஸ்பெக்டர் தில்லை நாயகம் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மணியை கொலை செய்தவர்கள் யார் எதற்காக கொலை செய்தனர் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். கொலை செய்யப்பட்டவரின் குடும்பதிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவரது உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News