உள்ளூர் செய்திகள்

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பெட்டி அடுத்த வாரம் சென்னை கொண்டு வரப்படுகிறது

Published On 2022-06-30 10:03 GMT   |   Update On 2022-06-30 10:03 GMT
  • இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் தமிழகத்திலும் சட்டசபை செயலகத்தில் இதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளது.
  • இங்குள்ள எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஓட்டு போட வசதியாக சட்டப்பேரவை குழு கூட்ட அறையில் ஓட்டு சீட்டு மூலம் வாக்குப்பதிவு நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

சென்னை:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து ஜூலை 18-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா நிறுத்தப்பட்டுள்ளார்.

இதனால் ஜனாதிபதி தேர்தலில் இருமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.

வேட்புமனுவை வாபஸ் பெற ஜூலை 2-ந்தேதி கடைசி நாளாகும். தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 18-ந்தேதி நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் தமிழகத்திலும் சட்டசபை செயலகத்தில் இதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளது.

இங்குள்ள எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஓட்டு போட வசதியாக சட்டப்பேரவை குழு கூட்ட அறையில் ஓட்டு சீட்டு மூலம் வாக்குப்பதிவு நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

இதற்கான வாக்குப்பெட்டி டெல்லியில் இருந்து அனுப்பி வைக்கப்படும். இறுதி வேட்பாளர் பட்டியல் தயாரானதும் அடுத்த வாரம் டெல்லி தேர்தல் கமிஷனுக்கு சென்று ஓட்டு பெட்டியை வாங்கி வருவார்கள்.

இந்த பெட்டிக்கு மாற்றாக மேலும் ஒரு வாக்குப்பெட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்படும்.

இந்த தேர்தலில் தமிழக எம்.எல்.ஏ.க்கள் 234 பேரும், தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் 39 பேரும், ராஜ்யசபா எம்.பி.க்கள் 18 பேர் என மொத்தம் 291 பேர் வாக்களிக்க உள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போடுவது தொடர்பான விளக்க முறைகளை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டசபை செயலகம் அடுத்த வாரம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News