உள்ளூர் செய்திகள்

அரசு போக்குவரத்து கழங்கங்களில் டிரைவர்களை அரசே தேர்வு செய்ய வேண்டும்- ஜி.கே.வாசன்

Published On 2022-07-18 10:54 GMT   |   Update On 2022-07-18 10:54 GMT
  • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர் பணி நியமனங்கள் ஒப்பந்த முறையில் தனியார் மயமாக்குதலை கைவிட வேண்டும்.
  • அரசே நேரடியாக வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனங்கள் செய்ய வேண்டும்.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர் பணி நியமனங்கள் ஒப்பந்த முறையில் தனியார் மயமாக்குதலை கைவிட வேண்டும். அரசே நேரடியாக வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனங்கள் செய்ய வேண்டும்"

தனியார் நிறுவனம் மூலம் பணியமர்த்திட டெண்டர் விடப்படுவது தனியார் மயமாக்குதலுக்கு வழிவகுக்கும் நடவடிக்கையாகும்.

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, பதிவு மூப்பு அடிப்படையில் பணிக்காக காத்திருக்கும் இந்நிலையில் ஓட்டுநர்களை தனியார் நிறுவனம் தேர்வு செய்வதால் பல்வேறு முறைகேடுகள் நடைபெற மிகுந்த வாய்ப்பு உள்ளது.

எனவே மேற்படி தனியார்மயமாக்கும் தமிழக அரசு மற்றும் போக்குவரத்து நிர்வாகத்தின் நடவடிக்கைகள் திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News