உள்ளூர் செய்திகள்

2024 தேர்தலுக்கு களம் அமைக்கும் அமித்ஷா

Published On 2022-08-06 10:43 GMT   |   Update On 2022-08-06 10:43 GMT
  • சமீபத்தில் சென்னை வந்த பிரதமர் மோடி கட்சியின் உயர்மட்ட குழுவினருடன் 2 மணி நேரம் உரையாடினார்.
  • அப்போது கட்சியின் செயல்பாடுகள் பற்றி நாடி பிடித்து பார்த்துள்ளார். இதுபற்றி அமித்ஷாவிடம் விவாதித்து இருக்கிறார்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 29-ந் தேதி கோவை வருகிறார். திருச்சி, கோவை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள கட்சி அலுவலகங்களை அவர் திறந்து வைக்கிறார்.

இது அதிகாரப்பூர்வமான நிகழ்ச்சியாக இருந்தாலும் இந்த பயணத்தில் வேறு சில முக்கிய வியூகங்களுக்கும் அடித்தளம் போட இருக்கிறார். சமீபத்தில் சென்னை வந்த பிரதமர் மோடி கட்சியின் உயர்மட்ட குழுவினருடன் 2 மணி நேரம் உரையாடினார். அப்போது கட்சியின் செயல்பாடுகள் பற்றி நாடி பிடித்து பார்த்துள்ளார். இதுபற்றி அமித்ஷாவிடம் விவாதித்து இருக்கிறார்.

அதன் அடிப்படையில் சில ஆலோசனைகள் வழங்க இருக்கிறார். இதையொட்டி பா.ஜனதா மூத்த தலைவர்கள் அனைவரும் கண்டிப்பாக 29-ந் தேதி கோவையில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

2024 தேர்தலை எப்படி சந்திப்பது? கட்சிக்குள் நிலவும் சில கோஷ்டி மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது, கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிரச்சினையில் பா.ஜனதா எடுக்க வேண்டிய நிலைப்பாடு போன்ற பல்வேறு விசயங்கள் தொடர்பாக விவாதித்து தேர்தலுக்கான களத்தை அமைத்துகொடுப்பார் என்று கட்சி நிர்வாகிகள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Tags:    

Similar News