உள்ளூர் செய்திகள்

வேகமாக வாகனம் ஓட்டும் சிறுவர்களால் விபத்து ஏற்படும் அபாயம்

Published On 2022-07-13 10:27 GMT   |   Update On 2022-07-13 10:27 GMT
  • சிறுவர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாகனம் ஓட்டுவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.
  • பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு உரிய வயதுக்கு பிறகே வாகனம் ஓட்ட அனுமதிக்க வேண்டும்

நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் சாலை விதிகளுக்கு புறம்பாக வயது குறைந்த சிறுவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டி செல்கின்றனர். அதுவும் தாறுமாறாக வேகமாக ஓட்டி செல்வதால் மற்ற வாகன ஓட்டிகள் பயத்துடனே செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் சிறுவர்கள் போட்டி போட்டு கொண்டு வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

இதில் சிறுவர்கள் பாதிப்படுவது மட்டுமின்றி எதிரே வரும் மற்ற வாகன ஓட்டிகளும் கடும் பாதிப்பை சந்திக்கின்றனர். மேலும் சிறுவர்களில் பலர் முறைப்படி டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் பயணிக்கின்றனர். இந்த செயல் மோட்டார் சட்டம் படி குற்றமாகும். குறிப்பாக இரவு நேரங்களில் மின்னல் வேகத்தில் வாகனங்களை இயக்கி செல்வதால் பெரும் அசம்பாவித சம்பவம் நடைபெற வாய்ப்பு உள்ளது.

எனவே பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு உரிய வயதுக்கு பிறகே வாகனம் ஓட்ட அனுமதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர். இதே ப்போல் நன்னிலம்பகுதியில் சிறுவர்கள் வாகனம் ஓட்டு வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News