உள்ளூர் செய்திகள்

நிறுவன தலைவர் ரஜினிகாந்த்.

தமிழக அரசு முறையான விசாரணை நடத்த வேண்டும்

Published On 2022-07-19 08:32 GMT   |   Update On 2022-07-19 08:32 GMT
  • தமிழக அரசு முறையான விசாரணை நடத்த வேண்டும் என மகாசபை நிறுவன தலைவர் வலியுறுத்தினார்.
  • இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.

ராமநாதபுரம்

அகில இந்திய அகமுடையார் மகாசபை நிறுவன தலைவர் ரஜினிகாந்த் ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகில் தனியார் பள்ளியில் தங்கி படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ததாக கூறப்பட்டது. ஆனால் மாணவியின் தாய் தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு திட்டமிட்ட படுகொலை என்று பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவியின் மரணம் குறித்து நீதி கேட்டு பெற்றோர்கள் 4 நாட்கள் போராட்டம் நடத்தி வந்தும் பள்ளி மாணவி மரண விவகாரத்தில் உளவுத்துறை, காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் முறையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

இதற்கு காரணமானவ ர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்தச் சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News