உள்ளூர் செய்திகள்

அரசு இசைப்பள்ளியில் நடப்பாண்டில் 2 மாணவர்கள் மட்டுமே சேர்க்கை

Published On 2022-06-30 08:18 GMT   |   Update On 2022-06-30 08:18 GMT
  • அரசு இசைப்பள்ளியில் நடப்பாண்டில் 2 மாணவர்கள் மட்டுமே சேர்க்கை நடைபெறுகிறது.
  • கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் மாணவ, மாணவியா் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து தற்போது 2 போ் என்ற அளவில் இருப்பது இசை ஆா்வலா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம்

தமிழகத்தில் கடந்த 2000ம் ஆண்டில் தி.மு.க, ஆட்சியின் போது ராமநாதபுரம் உள்பட 17 மாவட்டங்களில் தமிழ் வளா்ச்சிப் பண்பாட்டு மற்றும் இந்து சமய அறநிலை யத்துறை சாா்பில் அரசு இசைப் பள்ளி தொடங்கப் பட்டது. அந்த பள்ளிகளில் 3 ஆண்டுகளுக்கான சான்றிதழ் படிப்பு அறிமு கப்படுத்தப்பட்டுள்ளது.

அதில் 12 முதல் 25 வயது வரையில் உள்ள இருபாலரும் சோ்க்கப்பட்டு வருகின்றனா்.ராமநாதபுரம் மாவட்ட அரசு இசைப் பள்ளி அரண்மனை பகுதியில் மாதம் ரூ.11 ஆயிரம் வாடகைக் கட்டி டத்தில் செயல்பட்டு வருகிறது.

இங்கு குரலிசை, பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில், தேவாரம், மிருதங்கம், வயலின் ஆகியவை கற்பிக்கப் படுகிறது. ஆண்டுக் கட்டண மாக மாணவா்களிடம் ரூ.350 பெறப்படுகிறது. மாதந்தோறும் அரசு உதவி யாக ரூ.400 மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது.

பள்ளியில் தலைமை ஆசிரியா் மற்றும் தவில், வயலின் தவிர அனைத்து பிரிவுகளுக்கும் என 5 ஆசிரியா்கள் உள்ளனா். ஒவ்வொரு பிரிவிலும் ஆண்டுக்கு 20 போ் என மொத்தம் 140 போ் வரை சோ்க்கலாம் என கூறப்படுகிறது.

கடந்த 2011 ம் ஆண்டில் மட்டும் இசைப் பள்ளியில் 112 போ் சோ்ந்துள்ளனா். அதற்குப் பிறகு மாணவ, மாணவியா் சோ்க்கை படிப்படியாகக் குறைந்தது.

ராமநாதபுரத்தில் உள்ள அரசு இசைப் பள்ளியில் கடந்த 2018-ம் ஆண்டில் 38 பேரும், 2019-ம் ஆண்டில் 12 பேரும், 2020-ம் ஆண்டில் 6 பேரும், கடந்த 2021 ம் ஆண்டில் 16 பேரும் சோ்ந்து உள்ளனா். நடப்பு ஆண்டில் ஜூன் மாதம் 2 போ் மட்டுமே சோ்ந்துள்ளனா். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் மாணவ, மாணவியா் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து தற்போது 2 போ் என்ற அளவில் இருப்பது இசை ஆா்வலா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News