உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம்

Published On 2022-08-05 09:25 GMT   |   Update On 2022-08-05 09:25 GMT
  • கலெக்டர் அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
  • இந்த தகவலை ராமநாதபுரம் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அஜித்குமார் தெரிவித்தார்.

ராமநாதபுரம்

கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஆயுதம் என்று அரசு அறிவித்துள்ளது. உருமாறிய ஒமைக்ரான் கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் தடுப்பூசி 85 சதவீதம் சிறப்பாக செயல்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மூன்றாவதாக பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் போடுவதற்கான சிறப்பு முகாமை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

ஏற்கனவே 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் அனைவரும் பூஸ்டர் டோஸ் போட்டனர். அனைத்து அலுவலகங்களில் இருந்தும் அதிகாரிகள் முதல் அனைத்து பணியாளர்களும் ஆர்வமுடன் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்டனர்.

மாலை வரை நடந்த சிறப்பு முகாமில் 300-க்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். விடுபட்டவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்த வேண்டும்.

செப்டம்பர்30-ந்தேதி வரை 18 வயது முதல் 59 வயதிற்கு உள்பட்ட அனைவரும் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடலாம் என்று ராமநாதபுரம் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அஜித்குமார் தெரிவித்தார்.

Tags:    

Similar News