உள்ளூர் செய்திகள்

வண்டல்-களிமண், கிராவல் மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்

Published On 2022-08-18 08:16 GMT   |   Update On 2022-08-18 08:16 GMT
  • வண்டல்-களிமண், கிராவல் மண் எடுக்க விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
  • வருகிற 23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்து றை மற்றும் ஊரக வளர்ச்சி/ பஞ்சாயத்து ராஜ் கட்டுப்பாட்டில் உள்ள (நீர் நிலை) கண்மாய்களிலிருந்து விவசாயப் பணிக்கு வண்டல் களிமண், கிராவல், மண் எடுத்துச் செல்வதை எளிமையாக்கும் விதமாக வட்டாரம் தோறும் வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆகிய துறைகள் இணைந்து சிறப்பு முகாம்கள் நடத்திட மாவட்ட நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் வட்டாட்சி யர் அலுவலம், பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற 23-ந் தேதி அன்றும், கீழக்கரை, முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற 24-ந் தேதி அன்றும்,

ஆர்.எஸ்.மங்களம், கடலாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற 25-ந்தேதி அன்றும், திருவாடானை, கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற 26-ந்தேதி அன்றும் இச்சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது,

முகாமினை பொதுமக்கள் தவறாது பயன்படுத்தி, வண்டல் மண் எடுக்க அனுமதி கோரும் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News