உள்ளூர் செய்திகள்

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Published On 2022-07-10 08:54 GMT   |   Update On 2022-07-10 08:54 GMT
  • பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
  • பேரணிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் சேகு ஜலாலுதீன் செய்து இருந்தார்.

கீழக்கரை

திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் பெரியபட்டினம் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ஊராட்சி தலைவர் அக்பர்ஜான் பீவி தலைமையில், கவுன்சிலர்கள் பைரோஸ் கான், சுமதி ஜெயக்குமார் முன்னிலையில் நடந்தது.

ஊராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று செய்யதலி அப்பா ஒலியுல்லா தர்காவில் நிறைவடைந்தது. இதில் மாணவ, மாணவிகள் பதாகைகளை ஏந்தி, பிளாஸ்டிக்கிற்கு பதிலாக மஞ்சள் பையை உபயோகிக்குமாறு கோஷமிட்டனர். வணிக நிறுவனத்திற்கும் பிளாஸ்டிக் பயன்பாடு தடை குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், தூய்மைப் பணியாளர்கள், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் அங்கன்வாடி பணியாளர்கள், அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பேரணிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் சேகு ஜலாலுதீன் செய்து இருந்தார்.

Tags:    

Similar News