உள்ளூர் செய்திகள்

விருது பெற்ற விளையாட்டு வீரரை பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. பாராட்டினார்.

விளையாட்டுக்கு முக்கியத்துவம் தருபவர் மு.க.ஸ்டாலின்- எம்.எல்.ஏ. பேச்சு

Published On 2022-09-04 10:09 GMT   |   Update On 2022-09-04 10:09 GMT
  • சாதனை படைத்த மாணவனை நேரில் அழைத்து சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
  • விளையாட்டுக்கு முக்கியத்துவம் தருவதன் மூலம் இளைஞர்கள் பாதை மாறி செல்வதை தடுக்க முடியும்.

திருவாரூர்:

பக்ரைன் நாட்டில் நடைபெற்ற ஆசிய அளவிலான வாலிபால் போட்டியில் இந்திய அணி சார்பில் திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் கலந்து கொண்டார். இந்த போட்டியில் இந்திய அணி இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியது.

மேலும் 17 நாடுகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் சிறந்த ஆட்ட நாயகன் விருதை திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் பெற்றுள்ளார். இந்த மாணவனின் சாதனையை பெருமைப்படுத்தும் வகையில் பூண்டி கலை வாணன் எம்.எல்.ஏ சாதனை மாணவனை நேரில் அழைத்து சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, இந்த மாணவன் செய்த அளப்பரிய சாதனையால் திருவாரூர் மாவட்டத்திற்கு பெருமை கிடைத்துள்ளது. விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த வேண்டும், உற்சாகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் செஸ் ஒலிம்பியாட் போட்டியை 6 மாதத்தில் நடத்தி காட்டினார்.முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளையாட்டு துறையில் தனி கவனம் செலுத்தி வருகிறார். விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தி விளையாட்டுக்கு முக்கியத்துவம் தருவதன் மூலம் இளைஞர்கள் வழி தவறி பாதை மாறி செல்வதை தடுக்க முடியும் என்பதால் விளையாட்டுக்கு முக்கியத்துவம் தருகிறார் என்றார்.

Tags:    

Similar News