உள்ளூர் செய்திகள்

ரூ.1 லட்சம் வழிப்பறி செய்ததாக நாடகமாடிய வாலிபர்

Published On 2022-10-07 09:31 GMT   |   Update On 2022-10-07 09:31 GMT
  • ரூ.1 லட்சம் வழிப்பறி செய்ததாக நாடகமாடிய வாலிபர் சிக்கினார்.
  • ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தது அம்பலமானது.

மதுரை

மதுரை முடக்கத்தான் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 26). இவர் பரவை காய்கறி மார்க்கெட்டில் ஒட்டு மொத்த கொள்முதல் வியாபாரி குமாரிடம் பணம் வசூலிப்பாளராக உள்ளார்.

நேற்று நள்ளிரவு அஜித்குமார் கூடல்புதூர் போலீஸ் நிலையத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கும்பல், என்னிடம் ரூ.1 லட்சத்தை வழிப்பறி செய்து விட்டது என்று புகார் செய்தார்.

செல்லூர் போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்ததாக கூறப்படும் குட்செட் ரோட்டில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அதில் அஜித்குமார் நள்ளிரவு நடந்து செல்வது தெரியவந்தது. வழிப்பறி செய்ததற்கான பதிவுகள் இல்லை. தனிப்படை போலீசார் அஜித்குமாரிடம் மீண்டும் விசாரித்தனர். அவர் குட்செட் ரோட்டில் நள்ளிரவு சம்பவம் நடந்ததாக தெரிவித்தார். ஆனால் இவர் வீட்டில் இருந்து 10:30 மணி அளவில் வெளியே புறப்பட்டு செல்வது தெரிய வந்தது.

போலீசார் சந்தேகத்தின்பேரில் அஜித் குமாரின் செல்போனை சோதனை செய்தனர். அப்போது அவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.1 லட்சத்தை இழந்தது தெரிய வந்தது. இவர் ஏற்கனவே வசூலித்த பணத்தை உரிமையாளர் குமாரிடம் ஒப்படைக்கவில்லை. இந்த நிலையில் அஜித்குமார் நேற்று வசூலான

ரூ. 1 லட்சத்தை ஆன்லைன் ரம்மியில் முதலீடு செய்து பணத்தை இழந்தது தெரியவந்தது. இது தொடர்பாக கூடல்புதூர் போலீசார் அஜித்குமாரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News