உள்ளூர் செய்திகள்

உக்ரைனில் படித்த மருத்துவ மாணவர்களின் கல்விக் கடன் ரத்தாகுமா?

Published On 2022-06-05 10:41 GMT   |   Update On 2022-06-05 10:41 GMT
  • உக்ரைனில் படித்த மருத்துவ மாணவர்களின் கல்விக் கடன் ரத்தாகுமா? என்ற வெங்கடேசன் எம்.பி. கோரிக்கைக்கு மத்திய மந்திரி பதில் அளித்தார்.
  • மருத்துவ மாணவர்களின் கல்விக் கடன் ரத்தாகுமா?

மதுரை

உக்ரைன் நாட்டில் படிக்கும் இந்திய மாண வர்களின் படிப்பு அங்கு நடந்து வரும் போரால் பாதிக்கப்பட்டு உள்ளது. அவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

அதற்கு மத்திய மந்திரி பகவத்கரத் பதில் அளித்துள்ளார். அதில் "வெளியுறவு அமைச்சக கணக்குப்படி 22 ஆயிரத்து 500 இந்திய மாணவர்கள் உக்ரைன் நாட்டில் தங்கி படித்து வந்தனர். ரஷ்யா வுடன் போர் காரணமாக அவர்கள் மத்திய அரசின் "ஆபரேசன் கங்கா" திட்டத்தின் கீழ் விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டனர்.

அங்கு நிலைமை சீரடைந்தவுடன் எல்லா தாக்கங்களையும் மதிப்பிட்டு, தீர்வுகளுக்கான வழிகளை பரிசீலிப்போம். இடைக்கால நடவடிக்கை யாக, நாடு திரும்பியுள்ள மாணவர்களின் கல்விக் கடன் தொடர்பாக ஆய்வு செய்யும்படி இந்திய வங்கியாளர் கூட்டமைப்பை அறிவுறுத்தி உள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெங்க டேசன் எம்.பி கூறுகையில், மத்திய மந்திரியின் பதி லில் நம்பிக்கை தரும் வார்த்தைகள் இருந்தாலும், முடிவுகள் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும். உக்ரைன் போரை கல்விக் கடன் ரத்து பிரச்சினை யுடன் இணைக்காமல், ஏற்கனவே உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ள மாணவர்களுக்கு நிவாரணம் வழங்கும் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News